திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கிரீன்பீல்டு விமான தளம் அமைக்க திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள வயலூர், அகரம், உச்சிமேடு, சூரகாபுரம், திருப்பந்றியூர், சிறு கிளாய், திருமங்களம், கண்டிகை, திருமணி குப்பம், குனிகாபுரம், மும்முடி குப்பம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை அரசு கைப்பற்றப் போவதாக கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-
இந்த மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள நிலங்களையும், விவசாய நிலங்களையும் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக அரசு கையப்படுத்தப்போகிறது. எனவே ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம், நானே தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தேன். அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் பொது மக்கள், பிரதி நிதிகளை கூட்டி கலெக்டர் முன்னிலையில் கருத்து கேட்க வேண்டும்.
பொதுமக்களின் விருப்பம் இருந்தால்தான் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. அலமாடி கிராமம் அருகே நிலம் உள்ளது. அங்கு விமான நிலையம் அமைக்கலாம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலரை மேடையில் பேசும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள், எந்த சூழ் நிலையிலும் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றனர். பொது மக்கள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கும் கண்டனம் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், உழவர், பேரியக்க தலைவர் சடகோபன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, மாநில துணைத் தலைவர் சீத்தா ராமன், சிவ. கோவிந்தராசு, கோ.ரவிராசு, பா.ம.க. மாவட்ட செயலாளர் கே.என் சேகர், லயன் பாலயோகி, மேகநாதன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக