ஜூலைக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்



                 தமிழ்நாடு அரசு அடுத்த ஆண்டு ஜூலைக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

               சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தலாம் என, மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தற்போது அது நடந்துவிடக் கூடாது என, சிலர் மறைமுகமாக திட்டமிடப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசே தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

               ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் தமிழக அரசு,  கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவு  செய்வது பெரிய காரியம் அல்ல. ஒரு சாதியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்க வேண்டும். 

0 கருத்துகள்: