திட்டக்குடியில் உழவர் சந்தைபா.ம.க., பொதுக்குழு வலியுறுத்தல்

திட்டக்குடி:

         திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

         திட்டக்குடி நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நகர தலைவர் சிங்காரம் தலைமையில் நடந்தது. வன்னியர் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் வாலமுத்து, நகர துணைத்தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் பாண்டியன், ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தனபால், செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் கொளஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் பழனிவேல் பேசினர்.

           கூட்டத்தில் தாலுகா அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட உள் ளதால் பழைய கட்டடத்தை கோர்ட்டிற்கு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மிகவும் பிற்பட்டோர் விடுதியை சுற்றிலும் கழிவுநீரை அகற்ற வேண்டும். திட்டக்குடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 கருத்துகள்:

டானியல் செல்லையா சொன்னது…

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com