சேலம்:
சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
சளி, இருமலால் அவதிப்பட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திங்கள்கிழமை சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோகுலம் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சில் சளி கட்டியிருப்பதால் கண்டிப்பாக மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பாமக தலைவர் ஜி.கே. மணியும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
1 கருத்துகள்:
பறவைகளின் புகலிடம் வேடந்தாங்கல். விலங்குகளின் புகலிடம் முதுமலை. சினிமாகாரர்களின் புகலிடம் கோடம்பாக்கம். 2.5 கோடி வன்னியர்களின் புகலிடம் பாமக. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். எனவே மணத்தை மட்டும் நுகர்ந்து விட்டு தண்ணீரை நம் வீட்டு மல்லிகைக்கு ஊற்றுகிறோம். அதுபோல பணம் கொடுத்தால் மாற்று கட்சிகளிடம் இருந்து வாங்கிகொண்டு ஓட்டுகளை பாமகவுக்கு 2.5 கோடி வன்னியர்களும் போடணும். நம் குலபெருமை விளங்கனும். ஆண்ட பரம்பரையான நாம் ஆள சபதம் எடுக்கணும். பணத்துக்காகவும், பதவிக்காகவும், சினிமா கவர்ச்சியையும் நம்பி வன்னியர்கள் மாற்று கட்சிக்கு ஓடக்கூடாது. நம் வன்னியகுல தந்தை டாக்டர் அய்யா கரத்தை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள வன்னியர் சொந்தங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அப்போது பாமக 100 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெரும். ஊழல் கட்சிகள், கோஷ்டி கட்சி, சினிமாக்காரன் கட்சிகள் ஒழியனும்.
கருத்துரையிடுக