சிதம்பரம் :
"என் மீது வழக்குபோட்டு உள்ளே தள்ளிய தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என முதலில் நான் தான் கூறினேன்'' என வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார்.
சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது:
என் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளியதையும் மறந்து, தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தால் தான் நமக்கு சுய மரியாதை கிடைக்கும் என பா.ம.க., தலைவர் ராமதாசிடம் கூறினேன். சண்டை என்றாலும், சமாதானம் என்றாலும் கருணாநிதியால் மட்டுமே முடியும். என் மீது வருத்தமில்லையே என நான் கருணாநியிடம் கேட்க, அதை ஞாபகம் வைத்திருக்கிறாயா என கேட்டார்.
சிதம்பரத்தில் ஸ்ரீதர் வாண்டையாருக்கும், எங்களுக்கும் ஏராளமான வம்பு வழக்குகள் நடந்தது. நானே முன்னின்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறேன். இதனால் தலைவர்கள் பாதிக்கப் போவதில்லை. இருதரப்பு மக்கள் தான். நேரடியாக சண்டையிட்ட நாங்கள், தற்போது பக்குவப்பட்டு சமாதானத்திற்கு வந்து விட்டோம்.இவ்வாறு குரு பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக