சேத்தியாத்தோப்பு :
புவனகிரி தொகுதியில் குடிசைத் தொழில்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறியது:
புவனகிரி தொகுதியில் மிகப்பெரிய ஏரியான வாலாஜா ஏரியை ஆழப்படுத்தவும், வெள்ளாற்று கரைகளை பலப்படுத்தவும் தடுப்பணை அமைக்கவும் பரவனாற்றை தூர் வாரி ஆழப்படுத்தவும், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க பாடுபடுவேன். என்.எல்.சி., 3 வது மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மூலம் வெளியேற்றப்படும் நீரை விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் அமைத்தல், சேத்தியாதோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனபடுத்தப்படும். சேத்தியாத்தோப்பு, புவனகிரி பஸ் நிலையங்களை மேம்படுத்துவேன்.
தொகுதியில் குடிசைத் தொழில்களை மேம்படுத்தும் வகையில் மீன் பண்ணை, தேனீ வளர்ப்பு, பட்டு நெசவு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சிப்பேன்.காகித ஆலை விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். விவசாய கூட்டுறவு சங்க கிளைகளை அதிகரித்து தருவேன். புவனகிரியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்.அனைத்து கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களையும் பாதுகாத்திட நிரந்தர வெள்ளத்தடுப்பு அணை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக