மேட்டூர் சதுரங்காடியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஜி.கே. மணியை ஆதரித்து பேசினார்.
அப்போதுபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:
கட்சித் தலைவர் என்ற முறையில் ஒருசில கிராமங்களுக்கு ஜி.கே. மணியினால் செல்ல முடியவில்லை. கட்சிப் பணியை அதிகமாக நான் அவருக்கு கொடுத்ததால் அவரால் செல்ல முடியவில்லை. அவர் பேசும்போது என்னுடைய அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்போம் என்று கூறினார்.
இதற்கு என்னுடைய அனுமதியே தேவை இல்லை. அவர் வாரம் ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று கண்டிப்பாக மக்களை சந்திப்பார். இந்த தொகுதி கடந்த 5 ஆண்டுகளில் அமைதி பூங்காவாக இருந்ததை அனைவரும் அறிவீர்கள். பகைவர்களுக்கு கூட அருளும் நல்ல நெஞ்சம் கொண்டவர் அவர். கட்சி, இனம், மதம் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினர்களிடையேயும் பழகுவார்.
யாரும் இவரை குறை சொல்ல முடியாது. எவரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கதாதவர். இவருடைய தொண்டு தூய்மையானதாக இருப்பது அனைவரும் அறிந்தது. ஜி.கே.மணி வெற்றியை தடுக்க முடியாது. ஆகவே எதிர்த்து நிற்பவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக