பாட்டாளி மக்கள் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி

         திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில்  பாமக வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது



2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

பொதுவாகவே தமிழக மக்கள் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் மாற்றத்தை விரும்புவார்கள். MGR இதற்க்கு விதிவிலக்கு. அதை செய்தேன் , இதை செய்தேன் என்று திமுக சுய விளம்பரம் செய்ததே தவிர மக்கள் வெறுப்புகளையும், ஆத்திரத்தையும் பற்றி சிறுதும் கவலைபடவில்லை. திமுக தோற்றதற்கு பத்து காரணங்கள். 1 . விலைவாசி உயர்வு(அரிசி 1 ரூபாய், சாம்பார் 50 ருபாய் ஆகிறது) 2 ,.கடுமையான மின்வெட்டு 3 . அரசியலிலும் , சினிமாவிலும் குடும்ப ஆதிக்கம், 4 ஊழல் 5 . தனியார் பள்ளிகளின் அதிக கட்டணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 6 . வேலை வாய்ப்பில் உருப்படியான திட்டங்கள் இல்லை 7 . மணல் கொள்ளை , அரிசி கடத்தல் கட்டுப்படுத்த முடியவில்லை. 8 . விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று சொல்லி உருப்படியாக அதை செய்யவில்லை. 9 . விவசாயிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்ய வில்லை . 10 . மதுவை ஒழிப்பதற்கு எதுவும் செய்யவில்லை.
சேற்றுடன் சேர்ந்து மீனும் நாறுவது போல , திமுகவுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் தோல்வி.
2.5 கோடி வன்னியர்கள் இருந்தும் பாமக தோல்வி. என்னதான் நல்ல திட்டங்கள் அமல் படுத்தினாலும், மக்கள் எதில் குறை உள்ளதோ அதை பற்றித்தான் பேசுவார்கள். அதையே ஊதி ஊதி பெருசு ஆக்கிவிடுவார்கள். இதை எதிர் கட்சி சாதகமா பின்பற்றி வெற்றி பெற்று விட்டது. இனி வரும் காலங்களில் இதே பார்முலாவை பாமக பின்பற்றினால் வெற்றி நிச்சயம். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2014 MP தேர்தலில் பாமக வெற்றி பெறனும்.

dakaraidakila சொன்னது…

திமுக, பாமக தோற்றதற்கு பத்திரிக்கையும் ஒரு காரணம். அது என்னவோ திமுக, பாமகவை பற்றி தரக்குறைவாக எழுதுவது தினமலர், விகடன் மற்றும் தினமணி பத்திரிக்கைதான். ஏன் இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம், பொறமை என்று தெரியவில்லை. தமிழக மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் , பதவி சுகம் பார்க்காமல் போராடும் ஒரே கட்சி பாமக.