சென்னை:
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைகள் இருந்தாலும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதில் உள்ள குறைகளை படிப்படியாகக் களைய வேண்டும் என்றுதான் பாமக வலியுறுத்தி வந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை கெளரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக