தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-

              வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.

              இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத்தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 கருத்துகள்: