"காவல்துறையே குற்றவாளிகளை
உடனடியாக கைது செய்"
பாமக மாநில துணைப் பொதுச்செயலாளரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் திரு. மு. இளஞ்செழியன்.
இன்று அதிகாலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி அருகே பைபாஸ் ரோடில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, திரு. மு.இளஞ்செழியன் வீட்டின் வாசலில் நின்ற ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலைக்கு காரணமான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்செழியன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, மதுரை பகுதியில் பதட்டமாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக