உடுமலை:
சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி உடுமலையில் திங்கள்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது .
பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணைப் பொதுச் செயலர் பாலசுந்தரி தலைமை வகித்தார். நகரச் செயலர் காந்தி செல்வம் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கக் கோரியும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன், மாவட்டச் செயலர் பழனிசாமி, நிர்வாகிகள் குணசேகரன், கணக்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக