சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-
சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்க்காமல் ஐகோர்ட்டால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டபடி அச்சடிக்கப்பட்டு தயாராக இருக்கும் சமச்சீர் கல்வி பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (2-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திண்டிவனத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் கூட மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தெருவுக்கு தெரு மதுக்கடைளை திறந்து வருகின்றனர். இலவச திட்டங்களை செயல்படுத்த மதுக்கடைகளை திறந்து வருவாய் ஈட்ட முயலுகிறார்கள்.
தமிழக அரசு மதுக்கடைகள் மூலம் வருமானத்தை உயர்த்துவதில் குறியாக உள்ளது. கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடைகள் மூலம் வரு மானம் வெறும் 3 கோடியாக இருந்தது. தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கேரள அரசு மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எண்ணி அதை கட்டுப்படுத்த முடிவு செய்தது.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு மதுக்கடைதான் இருக்க வேண்டும். புதிதாக மதுக்கடைகள் திறக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்திலும் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. ஒரு கிராமத்தில் 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மது விற்பனை 5 மடங்காக உயர்ந்தாலும் கவலைப்படு வதில்லை.
மது விற்பனை உயர்ந்து அதனால் விபத்துகள் அதிகரித்தாலும், தாய்மார்கள் கணவனை இழந்து விதவைகளானாலும் அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படாது. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.க. சார்பில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள பா.ம.க. கட்சியினர், நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் பெருமளவில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக