இந்தியாவின் 65வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தி:
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இந்தியாவில் தவிப்போரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மக்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டிருக்கின்றனர். இலவசங்களை ஒழித்து மக்களுக்கு தரமான கல்வி, சிறப்பான மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதன் மூலமும் மதுவை ஒழிப்பதன் மூலமும்தான் மக்களுக்கு உண்மையான விடுதலையை வழங்க முடியும்.
1 கருத்துகள்:
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் இல்லையெனில் எதுவும் இயங்காது. இவர்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் அரசு எதுவும் செய்யவில்லை இன்று விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருப்படியாக அரசு செய்யவில்லை. அதேபோல் தொழிலாளர் நல திட்டங்களான ESI , PF , Graduity போன்றவைகள் பல தொழிற்சாலையில் அமல்படுத்தவில்லை. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சியும், வியர்வையை குடிக்கும் தொழிற்சாலைக்கு சொந்தக்காரரான பண முதலைகள், ஏகாதிபத்திய முதலாளிகள் உள்ளனர். ஒரு தொழிற்சாலையோ, கடையோ, அல்லது ஓட்டலிலோ குறைந்தது 10 பேர் வேலை செய்தால் ESI , PF , Graduity , வார விடுமுறை, தேசிய விடுமுறை கொடுக்க வேண்டும் . இது தொழிலாளர் சட்டம். ஆனால் பல தனியார் நிறுவன முதலாளிகள் இதை கொடுக்காமல் ஏப்பம் விடுகின்றனர். (குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலையில் ESI , PF , Graduity , வார விடுமுறை, தேசிய விடுமுறை இல்லை) (நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை கிராமத்தில்
ஜெகன் ஸ்பின்னிங் மில் (பழைய பெயர் சம்பூர்ண லட்சுமி ஸ்பின்னிங் மில்)
satellite view ( http://wikimapia.org/6870927/ta/Jagan-Spinning-Mill
) கடந்த 25 வருடமாக இயங்கி வருகிறது. இங்கே பகல்,இரவு ஷிப்ட் என கிட்டதட்ட 300 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு தொழிலாளர் நலதிட்டங்களான ESI , PF இதுவரை அமல் படுத்தவில்லை. மேலும் வார விடுமுறை ,
அரசு விடுமுறை என எதுவும் தருவதில்லை. அதற்கான சம்பளமும் தருவதில்லை). அதேபோல் ஒரு நாட்டின் கண்கள் பெண்கள். இன்று பெண்கள் முன்னேற்றம் கேள்விக்குறி. ஏனென்றால் இன்று மது, போதைபொருட்கள் (கஞ்சா, பான்பராக், குட்கா) , சூதாட்டம் (லாட்டரி, கிரிக்கெட்) நாட்டை கெடுக்கிறது. விவசாயிகள் ,தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் போராடும் ஒரே கட்சி பாமகதான். மற்ற கட்சிக்கு நாதி இல்லை. பேசவும் மாட்டார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்த்தது ஓட்டு வாங்கிவிட்டு , ஏப்பம் விடுகின்றவர்கள். எனவே விவசாயிகள் ,தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திக்கும், உரிமைக்கும் போராடும் பாமக கட்சியின் பின் விவசாயிகள் சங்கம் மற்றும் அமைப்புகள் ,தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்புகள் மற்றும் மாதர் சங்கம் மற்றும் பெண்கள் அமைப்புகள் அணி திரள வேண்டும். பாமக ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.
கருத்துரையிடுக