திட்டக்குடி:
சமச்சீர் கல்வி அமல்படுத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து திட்டக்குடியில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பா.ம.க., மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால் தலைமையில் மாணவரணி கண்ணன் தலைமையில் ஒன்றிய தலைவர் வீரபொன்முடி, நகர செயலர் சரவணன், ஒன்றிய செயலர் பழனிவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் குழந்தைவேல், வேல்முருகன், பஞ்சு ஆறுமுகம் உட்பட பலர் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக