பரமத்தி-வேலூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பா.ம.க.சார்பில் மாவட்டத்திலுள்ள 251 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியேற்று விழாவிற்கு நாமக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கபிலர் மலை ஒன்றியம், மோகனூர் ஒன்றியம், பரமத்தி ஒன்றியம், நாமக்கல் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
கொடியேற்று விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக