
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையை கண்டித்தும், அதனால் கடற்கரையோர கிராம மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று கூறியும் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உள்பட 127 பேர் மற்றும் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்துக்கு அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் 6 வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பேசினார்.
அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியது:
1988 ம் ஆண்டு கடற்கரையோர கிராமங்களில் அணு உலை வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் போராட்டம் நடத்தியது. அன்று இந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இன்று விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு, வாருங்கள், பெரிய அளவிலான போராட்டங்களை நடத்துவோம். இங்கு கூடியிருக்கிறவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் உள்ளனர். பெண்கள் சக்தி மிகப்பெரிய சக்தி. எனவே இந்த போராட்டம் வெற்றி பெற்று விடும்.
மாணவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்ததாக வரலாறு இல்லை. உங்களது போராட்டத்தை மாணவர் போராட்டமாக மாற்றுங்கள். சென்னைக்கு சென்ற பிறகு அய்யா மருத்துவரிடம் பேசி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
1 கருத்துகள்:
பாமக என்பது ஒரு அரசியல் நிறுவனம். இந்த நிறுவனத்தில் 2.5 கோடி வன்னியர்களை கொண்ட "வன்னியர் சங்கம்" என்பது வைப்பு நிதி போன்றது. . எனவே இந்த நிறுவனத்தில் மற்ற அனைத்து சமூகத்தினரூம் சேமிப்புகணக்கு உள்ள உறுப்பினராக ஆகவேண்டும். அதாவது பாமகவுக்கு அதரவு தரனும். ஏனெனில் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி பாமக.
பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களாக வன்னியர்கள் உள்ளதால் வன்னியர் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை கொடுக்கிறது. கட்சி பதவியில் உள்ள அனைவரும் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும். தேர்தல் நாள் என்பது பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களின் உரிமையை நிலை நாட்டும் நாள் என்று பாமகவினர் உழைக்க வேண்டும். வன்னியர் சமூகத்தில் உள்ள ஓய்வு பெற்ற மூத்தவர்கள் அனைவரும் கட்சி பணியாற்ற முன்வர வேண்டும். வேலைக்கு போகாமல் வீட்டு நிர்வாகம் கவனிக்கும் பெண்களும் முன்வர வேண்டும். மேலும் பாமக வருங்கால சந்ததியை நோக்கி வளரும் கட்சி. எனவே பாமக சார்பில் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் "அரசியல் பயிற்சி" கொடுத்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். குறிப்பாக ஞாயிற்று கிழமை விடுமுறை தினமானதால் அன்று மாவட்டம், வட்டம் வாரியாக பயிற்சி கொடுத்தால் கூட்டம் வரும். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதை போல வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு ஆதரவு அளித்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். "வடதமிழ்நாடு ஒரு வன்னியர் நாடு" என்று வன்னியர்கள் உணரவேண்டும். "தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. அதுபோல் தமிழ்நாட்டில் , வன்னியர் ஆள முடியவில்லை என்றால் வேறு யாரும் ஆள முடியாது என்ற நிலை வரவேண்டும். பாமகவில் புதிய அணிகள் உருவாக வேண்டும். தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பட்டதாரிகள் அணி, அரசு ஊழியர் அணி, வேலை வாய்ப்பற்றோர் அணி, விவசாய மேம்பாடு அணி போன்றவை. எனவே உள்ளாட்சி தேர்தலில் பாமக வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக பாடுபடவேண்டும்.
கருத்துரையிடுக