தென்காசி:
பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாமக சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலர் ஆறுமுகசாமியாதவ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் குலாம், தங்கராஜ், ஒன்றிய செயலர்கள் சண்முகசுந்தரம், காளிராஜ்,கடையநல்லூர் நகரத் தலைவர் மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சேது அரிகரன், மாநில துணைப் பொதுச்செயலர் திருமலைகுமாரசாமி யாதவ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றவும், தமிழக முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நகரத் தலைவர் சித்திக், மீரான், இஸ்மாயில், விஜயாகனகராஜ் முபாரக்,செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசம்மா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக