ஜெயங்கொண்டம் நகராட்சியில் பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி


ஜெயங்கொண்டம்: 

         ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மீனாள் சந்திரசேகர் 6,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

                இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் லெட்சுமிகாந்தன் 5,952 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.லட்சுமி 2,194 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கலைவாணி 548 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 

அ.தி.மு.க., 8 வார்டுகளிலும்,
தி.மு.க., பா.ம.க., தலா 3 வார்டுகளிலும், 
காங்கிரஸ் ஒரு வார்டிலும்,
சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் 

வெற்றி பெற்றுள்ளனர்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உள்ளாட்சி தேர்தலில் பாமக படுதோல்வி என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வன்னியர்கள் (2.5 கோடி). வன்னியர்களில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு எந்த கட்சியும் போட்டியிட அனுமதியில்லை. கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. எனவே கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர் பதவி வெற்றிகளையும் சேர்த்து பார்த்தால் பாமக மூன்றாவது பெரிய கட்சியாக தமிழகத்தில் உள்ளது.