சேலம்:
ஓமலூர் அருகே உள்ள பொட்டிபுரத்தில் உள்ள நிலத்தின் ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓமலூர் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு கடந்த 27-ந் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 29-ந் தேதி தமிழரசு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி தமிழரசு தரப்பில் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சாதிப்பெயரை சொல்லித்திட்டி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஓமலூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தமிழரசு, மாணிக்கம், ராஜம்மாள், கண்ணுபிள்ளை, கண்ணம்மாள், மற்றும் நிலத்தை வாங்கிய ரத்தினம் ஆகியோரிடம் நீதிபதி இளங்கோவன் விசாரணை நடத்தினார். மேலும் நிலப் பத்திரத்தில் பதிவாகியுள்ள கையெழுத்து மற்றும் கைரேகைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக கையெழுத்து நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு தரப்பில் ஓமலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ஈரோடு நீதிமன்றம் எண் 1-ல் தினமும் காலை 10-30 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே மற்றொரு வழக்கிலும் இதே நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. மேலும் நிலப்பறிப்பு வழக்கில் கைதான ராஜம்மாள், கண்ணுபிள்ளை, கண்ணம்மாள், ரத்தினம் ஆகியோருக்கும் தினமும் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மாணிக்கம் என்பவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட வில்லை.
இதையடுத்து ஜாமீன் உத்தரவுடன் தமிழரசுவின் வக்கீல்கள் நேற்று மாலை சேலம் மத்திய சிறைக்கு சென்றனர். எனினும் ஜாமீன் ஆவணங்கள் ஒப்படைக்கும் நேரம் முடிந்து விட்டதால் தமிழரசு விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று ஜாமீன் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழரசு விடுதலையானார். அவரை பா.ம.க. வினர் வரவேற்று அழைத்து சென்றனர்.