கே. செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே. செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து ஏ.கே.மூர்த்தி பிரசாரம்

 செய்யக்கூடிய திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது:

 

 மதுரவாயலில் ஏ.கே.மூர்த்தி பேச்சு




சென்னை:

        மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து ஏ.கே.மூர்த்தி பிரசாரம் செய்தார். 
அப்போது ஏ.கே.மூர்த்தி பேசியது:-

                   தமிழகத்தில் இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனையை கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் கட்டி சாதனை செய்துள்ளனர். ஏழைகளுக்கு வீடு கட்ட நிதி உதவி, பெண்கள் மகப்பேறு, திருமண உதவி திட்டம், கிராமப்புற முன்னேற்ற திட்டம், இலவச ஆம்புலன்ஸ் வசதி என்று சாதித்து காட்டிய திட்டங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

                வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள். கலைஞர் ஆட்சியையும் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியையும் பார்த்தீர்கள். கலைஞர் சொன்னதை செய்து சிறப்பு பெற்றுள்ளார். இந்த தேர்தலிலும் செய்யக்கூடிய திட்டங்களைத்தான் தி.மு.க. அறிவித்துள்ளது. கலைஞர் சொன்னால் செய்வார். செய்ய முடியாத திட்டங்களை கேட்டு ஏமாந்து விடாதீர்கள். நல்லாட்சி தொடர தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே. செல்வம் வரலாறு

தொகுதி: மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ம.க. 
 
பெயர் : கே. செல்வம் 

வயது : 47 

கல்வி : எஸ்.எஸ்.எல்.சி.

சொந்த ஊர் : வானகரம் 

தொழில் : ரியல் எஸ்டேட் 

சமூகம் : வன்னியர் 

கட்சிப் பொறுப்பு : ஒன்றியச் செயலர் 

குடும்பம் : 

தந்தை வி. கிருஷ்ணன் 

 மனைவி எஸ். நிர்மலா 

மகன் லோகேஷ், 

மகள் தேவதர்ஷினி