சிலம்புச் செல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலம்புச் செல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் : உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானம்

சேத்தியாத்தோப்பு : 

           உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

            கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி, மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சின்னதுரை வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலர் சேரலாதன், ராஜா சாமிநாதன், வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

  1.  உள்ளாட்சியில் அனைத்து பதவிகளுக்கும் பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்துவது. 
  2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 
  3. சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். 
  4. மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் 

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலர்கள் இளையராஜா, சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலர் ராதாகிருஷ்ணன் பரமசிவம், பஞ்சநாதன், வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புவனகிரி ஒன்றிய செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேர்மன் சிலம்புச்செல்வி பிரச்சாரம்

சேத்தியாத்தோப்பு : 

          புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து மாவட்ட சேர்மன் சிலம்புச்செல்வி பிரசாரம் செய்தார்.

             கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, எறும்பூர், நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மணக்காடு, ஆனைவாரி, நல்லதண்ணீர் குளம் உள்ளிட்ட கிராமங்களில் சிலம்புச்செல்வி பிரசாரம் செய்தார். அவருடன் முன்னாள் மாவட்டச் செயலர் சின்னதுரை, தொகுதி பொறுப்பாளர் ராஜாசாமிநாதன், முன்னாள் ஒன்றிய செயலர் பரமசிவம் உள்ளிட்ட தி.மு.க., - வி.சி., கட்சியினர் பங்கேற்றனர்

புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

சிதம்பரம்,

           சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்ட மேடையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-  

               வீரமும், விவேகமும் நிறைந்த இந்த தொகுதியில் உங்களது வெற்றி வேட்பாளர் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் சில தேர்தல் வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை வேல் முருகனும், நானும் போராடி பெற்று தருவோம். போராட்டம் நடத்தி வருவதால் என்னை போராட்ட மன்னன் என்று நடிகர் கூறியுள்ளார். அவர் எதற்காக போராடினார். என்னையும், கருணாநிதி யையும் அறிக்கை மன்னன் என்றும் அவர் கூறியுள்ளார்.

                நாங்கள் அறிக்கை தான் விட முடியும். இந்த தொகுதி பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கோட்டை. சாதாரண கோட்டை அல்ல.எக்கு கோட்டை, இந்த கோட்டையில் ஓட்டை போட முடியாது.ஓட்டு தான் போட முடியும்.தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. வீரம் செறிந்த இந்த தொகுதியில் நமது வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும்.  இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

              கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சிலம்புச் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி கலைவாணன், சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கங்கை அமரன், செல்லப்பன், சுதாகர்,மோகன், ஜெயசீலன், தமிழ்க்குமரன், பா.ம.க.சிட்டிபாபு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்



கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன் பங்கேற்ப்பு

கடலூர்:

                ஞாயிற்றுக்கிழமை நடந்த கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச் செல்வி, பா.ம.க. முன்னணித் தலைவரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான ப.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.     

விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், 

                இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் கூட்டணி உறுதியாகி விட்டதா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.  கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன். முன் அனுமதி பெறாமலேயே முதல்வரையும் துணை முதல்வரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.  கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாசும் முதல்வர் கருணாநிதியும் முடிவு செய்வர் என்றார்.