பா.ம.க.களமிறங்கிய தேர்தல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க.களமிறங்கிய தேர்தல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க.களமிறங்கிய தேர்தல்கள்

பா.ம.க., களமிறங்கிய தேர்தல்கள்:
 
             பா.ம.க., 1991 சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தலைச் சந்தித்தது. இதில், யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டது. 194 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது; 5.89 ஓட்டு சதவீதத்தைப் பெற்றது. 

                அடுத்து 1996 சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. இதில், 116 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வென்றது; ஓட்டு சதவீதம் 3.84. 

              கடந்த 2001 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 27 இடங்களில் போட்டியிட்டு, 20 தொகுதிகளில் வென்றது; ஓட்டு சதவீதம் 5.56. 

              பின், 2006 தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 31 இடங்களில் போட்டியிட்டது. 18 தொகுதிகளை கைப்பற்றியது; ஓட்டு சதவீதம் 5.65. 

             வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது.