சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி சேலத்தில் பாமக ஆர்ப்பாட்டம்


எடப்பாடி:

                     மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்தக் கோரி எடப்பாடியில் பாமகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். இதன்படி, எடப்பாடியில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

                       எடப்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் கே.தொப்பக்கவுண்டன் தலைமை வகித்தார். எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணை செயலாளர் பி.தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் வை.குமாரசாமி, ஒன்றியச் செயலாளர்கள் மா.வேலன் ஏழுமலை, ஆர்.ரவி, கே.பி.எம் கொழந்தாக்கவுண்டர் உள்ளிட்டோர் பேசினர். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரி எடப்பாடி தாசில்தார் பி.சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாஎடப்பாடி, ஜூன் 15: ஏழை மாணவர்களுக்கு  இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா காமராஜர் கல்வி கழகத்தின் சார்பில் எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

                    சின்னமணலி ஊர் தலைவர் ஒய்.பி.கே.சம்பத் தலைமை வகித்தார். வி.தங்கராஜ் வரவேற்றார். பெவிசோ தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.பி.ராமசாமி, மீனவர் இளைஞர் பேரவைத் தலைவர் டி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எடப்பாடி அரசு பள்ளிகளில் படிக்கும் 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  2009-2010ம் கல்வி ஆண்டில் எடப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கெüரவிக்கப்பட்டனர்.  காமராஜர் கல்வி கழகத் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், துணைத் தலைவர் சி.பாலாஜி, செயலாளர் வி.திருநாவுக்கரசு, பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்: