சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி சேலத்தில் பாமக ஆர்ப்பாட்டம்


சேலம்:

                  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்து அனைத்து சாதியினருக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சி தலைமை அறிவித்திருந்தது.

                        இதையடுத்து சேலம் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட பாமக செயலர் கதிர் ராசரத்தினம் தலைமை தாங்கினார். மத்திய மாவட்டத் தலைவர் பி.சாம்ராஜ், செயலர் சிவசங்கரன், மாநகர் மாவட்டத் தலைவர் செவ்வை அன்புக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் சங்க மாநிலச் செயலர் இரா.அருள், பசுமை தாயக மாநில துணைச் செயலர் சி.பெ.சத்ரிய சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கவுன்சிலர்கள் அருள், தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: