சாதிவாரி கணக்கெடுப்பு கோரி திருவள்ளூரில் பாமக ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர்:

                            சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கோ.சீதாராமன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மாணிக்கம் வரவேற்றார். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட ஜாதியினர் அனைவருக்கும் அவரவர் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் உறுதி அளித்ததன் பேரில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்த பிரதமர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். திருத்தணிதிருத்தணியில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலர் எம். ஜோதிராமன் தலைமை வகித்தார்.

                       மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாக்யநாதன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகர அமைப்புச் செயலர் அ.க. மணி வரவேற்றார். முன்னாள் ஒன்றியச் செயலர் வினாயகம் நன்றி கூறினார்.கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலம் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலர் முருகதாஸ் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் துரை ஜெயவேலு, மாவட்ட அமைப்பு செயலர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், பாமக நிர்வாகிகள் சர்க்கரை ரெட்டியார், சாவித்ரி அம்மாள், ஒன்றியச் செயலர் வெங்கடேசன், ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் சிவ கோவிந்தராசன் கண்டன உரையாற்றினார்.

0 கருத்துகள்: