திருவாரூர்:
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவாரூர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்:
நாட்டிலேயே தமிழகத்தில் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கும் இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது. மக்களின் வாழ்நிலை அளவைக் கணக்கிடுவதற்கும், இட ஒதுக்கீடு அளவுக்கும், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவது மிகவும் முக்கியமானது. அனைத்துப் பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டின் அடித்தளம் அவர்களின் எண்ணிக்கைதான். எனவேதான், ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் டி.கே. மனோகரன், மாவட்ட அமைப்புச் செயலர் மா. பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் பாலசுப்பிரமணியன், முன்னாள் நகரச் செயலர் ராஜேந்திரன், அமைப்புச் செயலர் அக்பர் அலி, நன்னிலம் ஒன்றியச் செயலர் என்.ஆர். பன்னீர்செல்வம், ஒன்றியத் தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் வள்ளி மற்றும் ராணி, வன்னியர் சங்க மாநில துணைச் செயலர் என். மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக