நாகர்கோவிலில் பாமக ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில்:

                    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   சாதி வாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலர் ரவி, கிழக்கு மாவட்டச் செயலர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாநில இளைஞரணி துணைச் செயலர் பைஜு, மாநில மாணவரணி துணைச் செயலர் சித்தார்த்த சங்கர், நிர்வாகிகள் ரமேஷ், ராபின், ராமதாஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: