வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி வழக்கு

               மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக, வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
 
                  இப்போது வன்னியர்களுக்கு சம உரிமைகளும் வாய்ப்புகளும் தரப்படவில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அருந்ததியினருக்கும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னிய சமூகத்தினருக்கு குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். 
 
                 இதுதொடர்பாக, 20.11.09, 3.05.10 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தோம். ஆனால் எங்களது மனுக்களை அரசு பரிசீலிக்கவில்லை. இந்த மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

0 கருத்துகள்: