கள்ளக்குறிச்சி:
வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மற்றும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு பூம்புகாரில் ஜூலை 18-ல் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட விளக்க பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கோயில் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.
மகளிர் பெருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வது எனவும், ஜூலை 28-ல் நடக்க உள்ள தனி ஒதுக்கீடு போராட்டம் வெற்றி பெற வேண்டும் எனவும் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஏ.டி.கலிவரதன், மாநில மகளிரணி செயலாளர் காசாம்பு பூமாலை, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் எஸ்.டி.இராமு வரவேற்றார். மாநில வன்னியர் சங்கத் தலைவர் செ.குரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பி.ஆர்.குசேலன், மாநில துணைச் செயலாளர் எம்.அன்பழகன், ஆர்.வடிவேல் உள்ளிட்ட பலர் பேசினர்.
கல் வீசியவர் கைது:
தண்டலையில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு செ.குரு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார். அப்போது பெருவங்கூர் சுடுகாட்டு அருகே சென்றபோது அவரது வேன்மீது மூவர் கல்வீசி தாக்கியதில் வேன் கண்ணாடி உடைந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பெருவங்கூர் காலனி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெமினிகணேசன் (36) கைது செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக