புதுச்சேரி:
புதுச்சேரியில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமகவினர் சட்டப்பேரவை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் 3 பாமக எம்எல்ஏக்கள் உள்பட 507 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு இருந்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதை கண்டித்தும், பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பாமகவினரை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பாமக எம்எல்ஏக்கள் ஆர்.கே.ஆர்.அனந்தராமன், என்.ஜி.பன்னீர்செல்வம், கே.பி.கே.அருள்முருகன் உள்பட 507 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலர் கே.சி.ராமகிருஷ்ணன், துணைச் செயலர் வி.பி.பி.வேலும், பொருளாளர் ஜெ.கோபி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக