
மதுரை:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரையில் சனிக்கிழமை பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் அளித்த பேட்டி:
1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. 1989-ம் ஆண்டு மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.1991-தேர்தலிலும், 1996-தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பாமக அமைத்தது. கடந்த 91-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் வென்றது. 96-ம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைத்தன.
வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அதுபோன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது. முன்பு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்தபோது பாமகவை திமுக வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாகவே இது நடந்தது. பின்னர் திமுக பொதுக்குழு கூடி பாமகவை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பாமக தலைவர் கோ.க.மணி தலைமையில் ஐவர் குழு திமுக தலைமையுடன் பேச்சு நடத்தியது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்.
தேமுதிக இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்றும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை என்றார் ராமதாஸ்.
1 கருத்துகள்:
வெற்றி நிச்சயம் வரும். இது தமிழன்னை தரும் வேத வாக்கியம். இரண்டரை கோடி வன்னியர்களும் ஒன்று சேரும் காலம் வரும். காலம் வந்தால் அனைத்து தரப்பு மக்களும் பாமகவின் மக்கள் நல போராட்டங்கள், கொள்கைகளால் ஈர்க்கப்படும் நேரம் வரும். அப்படி நேரம் வரும்போது பாமகவுக்கு மக்கள் ஆதரவு பெருகும். அப்படி பெருகும்போது ஊழல் கட்சிகளும், வந்தேறிகளும், மைனாரிடிகளும், எதிரிகளும் அஞ்சி ஓடும் நிலைமை வரும். பாமக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். பாட்டாளியின் கோடி பட்டொளி வீசி கோட்டையில் பறக்கும். இதுவே நிரந்தர மக்கள் நல ஆட்சி என தமிழக மக்கள் வியக்க நேரும். இது அசைக்க முடியாத சரித்திர ஆட்சி என உலகம் வியக்கும். அப்போது பாட்டாளி சொந்தங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் தேடி வரும். காலம் மாறும். பாட்டாளி ஆட்சி மலரும். வாழ்க வன்னியர் ஒற்றுமை. வளர்க டாக்டர் அய்யாவின் புகழ்.
கருத்துரையிடுக