வரும் சுதந்திர தினம் முதல் மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி தயாரா? ராமதாஸ் கேள்வி

மதுரை:
          தமிழகத்தில் வரும் ஆக. 15 ம் தேதி சுதந்திர தினம் முதல் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த முதல்வர் கருணாநிதி தயாரா? என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில்  சனிக்கிழமை பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ்அளித்த பேட்டி:
              
             சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி, மதுவிலக்குக் கொள்கையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார். அப்படியெனில் வரும் சுதந்திர தினத்தன்று மதுவிலக்கு அமல் கொள்கையை அவர் அறிவிக்க தயாராக இருக்கிறாரா? ஒருவேளை மதுவிலக்குக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தும் பட்சத்தில், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டிவரும். அப்படியொரு நிலை ஏற்படுமானால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.


0 கருத்துகள்: