இனி ரேங்க் போட மாட்டோம்: மனம் திறந்தார் ராமதாஸ்

தேனி:

               "தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இனி ரேங்க் போடமாட்டோம்; ஒரு முறை ரேங்க் போட்டதால் தான் வெளியே நிற்கிறோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். 

தேனியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:

             மக்களின் பசியையும் பட்டினியையும் போக்க வேண்டும் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். அவர் சொல்வதை கேட்க நன்றாகத் தான் உள்ளது. இவற்றை போக்க வேண்டுமானால், பூரண மதுவிலக்கு வேண்டும். ஆகஸ்ட் 15ல் கொடியேற்றும்போது, அவர் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை அறிவிக்க வேண்டும். ஏழைகள் நலனுக்காக எத்தனை நலத்திட்டங்களை நிறைவேற்றினாலும் மதுவால் அவை அனைத்தும் அடிபட்டுபோகும்.

              கூட்டணி பற்றி பல குழப்பங்கள் உள்ளன. யார் எங்கு உள்ளனர் என்பதே தெரியாத நிலை உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இனி ரேங்க் போட மாட்டோம்; ஒரு முறை ரேங்க் போட்டதால் தான் வெளியே நிற்கிறோம். இனியும் அதை செய்ய மாட்டோம். தேர்தல் வர உள்ள நிலையில் மக்கள் ரேங்க் போடுவார்கள். நாங்கள் தனியாக நின்றாலும் 20 இடங்களில் வெற்றி பெறுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு மூலம் தேர்தல் நடத்தினால், அதில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக ரசீது வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.மாநில தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.


0 கருத்துகள்: