ஜாதிவாரியாக கணக்கெடுப்பு: முதல்வர் மீது அன்புமணி நம்பிக்கை

திருச்சி:

            ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிடுவார் என நம்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.   

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:  

             "பேசிப்பேசியே தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டார்கள். நடைமுறையில் என்ன செய்தார்கள்? வசனம் வேண்டாம், முடிவு வேண்டும். அதற்கான கொள்கைகளைக் கொண்ட ஒரே கட்சி பாமக மட்டும்தான். யார் வேண்டுமானாலும் விவாதத்துக்கு வரலாம்.   இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் டாஸ்மாக் கடைகளை எதிர்க்கிறோம். இதில் அரசியல் எதுவும் இல்லை. 43 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சினிமா துறையினர்தான் ஆண்டு வருகின்றனர். 

வேறுயாரும் வரக் கூடாதா? 

                இதை இளைஞர்கள்தான் மாற்ற வேண்டும்.   கூட்டணி பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். வேலையில் இறங்குங்கள். திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 5 எம்எல்ஏக்களை வெற்றிபெறச் செய்யுங்கள். வளர்ந்து வரும் ஒரே கட்சி பாமக மட்டும்தான். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால், பணம் இல்லை என்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி ஜாதிவாரியாக கணக்கெடுக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்' என்றார் அன்புமணி.


0 கருத்துகள்: