ரஜினி பட விவகாரம்:பாமக செயலாளர் உள்பட 22 பேர் விடுதலை

                  நடிகர் ரஜினிகாந்த், மனிஷாகொய்ராலா நடித்த பாபா திரைப்படம் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஸ்ரீரங்கா திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டரை சேதப்படுத்தி பாபா படச்சுருள் அடங்கிய பெட்டி கடத்திச்செல்லப்பட்டது.

                   இது தொடர்பாக அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் வைத்தி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 22 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வைத்தி, ரங்கநாதன் உள்பட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: