பாமக யாருடன் கூட்டணி வைக்கிறது என்று கவலைப்படத் தேவையில்லை:அன்புமணி

               காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம், காஞ்சீபுரம் வெள்ளைகேட் ஆகிய 2 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடந்தது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,

            ’’பா.ம.க. யாருடன் கூட்டணி வைக்கிறது என்று தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பார்த்து கொள்வார். தனித்து போட்டியிட்டாலும் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கு தொண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நான் ஒவ்வொரு கிராமமாக விரைவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.

                   வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள், போராடியவர்களை கவுரவிக்க உள்ளேன். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிகழ்வுக்கு நீங்கள் முடிவு கட்டுங்கள். யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் உறுதியோடு இருங்கள். யார் மக்கள் நலனுக்கு பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும்’’என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: