பவானி:
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பவானி சட்டமன்ற தொகுதியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் பவானி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பவானி சட்டமன்ற தொகுதியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் பவானி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
பா.ம.க.வில் கிளைக்கழகத்தில் செயலாளர் பதவியில் இருப்பவர்கள் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி பணியில் அவர்கள் வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சில நடிகர்கள் கோட்டையை பிடிக்க துடிக்கிறார்கள். இவர்களை நோக்கி சென்றவர்களை நம்முடைய கட்சியில் சேர்க்க வேண்டியது ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்களிடம் உள்ளது. கட்சியில் சேரும் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் பொறுப்புகளை உருவாக்க வேண்டும்.
பா.ம.க. இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. பா.ம.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, பவானி சட்டமன்ற தொகுதியை கேட்டு பெறுவோம். இந்த தொகுதியில் கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட அதிக ஓட்டுகள் பெற்று, இந்த தொகுதியை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக கட்சியினர் இப்போது இருந்தே தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.