புவனகிரி:
புவனகிரி சட்டமன்ற தொகுதி பாமக கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பயிற்சி முகாம் சேத்தியாத்தோப்பில் திருமண மண்டபத்தில் நடந்தது.
புவனகிரி சட்டமன்ற தொகுதி பாமக கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பயிற்சி முகாம் சேத்தியாத்தோப்பில் திருமண மண்டபத்தில் நடந்தது.
பாமக நிறுவனர் ராமதாசு கலந்துகொண்டு பேசியது .
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியில் 26, 27 வயதை கடந்தவர்கள் கிளை செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும். இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை வழிநடத்தி, வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடப் போவதில்லை. ஏதாவது ஒரு கூட்டணியில் தான் போட்டியிடப் போகிறோம். கூட்டணி குறித்து முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை கட்சி பொதுக்குழு எனக்கு வழங்கி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாளில் அறிவிப்பேன்.
ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாசு கூட்டணி மாறுவதாக சிலர் கூறுகிறார்கள். எந்த கட்சிதான் கூட்டணி மாறவில்லை. ஆனால் நாம் கூட்டணி மாறினால் மட்டும் விமர்சிக்கிறார்கள். ஒரு தேர்தலில் ஒரு கூட்டணியில் உள்ள கட்சி, அடுத்த தேர்தலில் அந்த கூட்டணியில் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்த்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக