
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரியில் ஒரு பலமான வெற்றிக் கூட்டணியை உருவாக்கி குறைந்த பட்சம் 7 சட்டமன்ற தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்து பெற்றுதர வேண்டுமெனவும், கூட்டணி சம்மந்தமாக முடிவு செய்ய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யாவுக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது எனவும் இந்த நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்கிறது.
மருத்துவர் அய்யா அமைக்க இருக்கும் கூட்டணியில் பா.ம.க.வும், கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, அணி பொறுப்பாளர்களும், தொகுதி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் அயராது பாடுபடுவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இக்கூட்டத்தில் ஆலோசகர் ராமக்கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகரன், பொருளாளர் கோபி, மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் மதியழகன், வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணராஜ், செல்வராஜ், வேலு, வடிவேலு, யுணுஸ், தங்க.அறிவழகன், சுரேஷ், ரமேஷ், வெங்கடேசன், சந்தானம், பாண்டியராஜன், சங்கர், சீனுவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக