தலைமை நிர்வாகக் குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமை நிர்வாகக் குழு கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனிதன் அழிவிற்கு மதுவே காரணம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

      பாமக நிர்வாக குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

           தமிழ்நாட்டில் மதுக்குடிப்பதே குற்றம் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு குடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்து, இசுலாம், கிறித்தவம், சமணம், புத்தம் போன்ற மதங்களும் அண்ணல் காந்தியடிகள், மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற வழிகாட்டி தலைவர்களும் வள்ளலார், திருவள்ளுவர் போன்றோரும் மதுவின் தீமையை தடுத்து மக்களை பாதுகாக்கும்படி வலியுறுத்தினார்கள்.

              ஆனால், இன்றோ எல்லா பகுதிகளிலும் (டாஸ்மாக்) திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் கொடுமை அதிகரித்து வருகிறது. திருமணம், பிறந்த நாள், சமயவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள், பள்ளி கல்லூரி விழாக்கள் என 10 பேர் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும், அதில் விருந்து என்ற பெயரில் குடிக்காதவர்களைக் கூட மது குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கும் கொடுமையும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் சீரழிவும் மேலோங்கி வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிக்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

                குடிப்பழத்தால் உடல்நலன் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே குடிகார கணவர்கள் இறப்பதால் இளம்பெண்கள் விதவையாவது தமிழகத்திலும் புதுவையிலும்தான் அதிகம். குடிக்கு அடிமையான கணவர்களின் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வதும், குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் நடக்கும் கணவன், மனைவி சண்டையால் சூழல் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி அடியோடு பாதிக்கப்படுவதும், குடிப்பழக்கத்தால் வேலையிழந்து சொத்துக்களை விற்று வறுமையில் வாடும் கொடுமையும், குடித்துவிட்டு வண்டி < ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் உறுப்பு இழப்புகள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதும் தமிழகத்தில்தான் அதிகம். கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களுக்கும், அடிதடி, சண்டை சச்சரவு, வன்முறை, சட்டம் ஒழுங்கு போன்றவற்றுக்கும் குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும்.

              ஆகவே எல்லா குற்றங்களுக்கும் தாய் மது குடிப்பழக்கமே. இவ்வாறு மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழகத்திலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் நலனை காக்க பூரண மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிர்வாகக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  


பாமக நிர்வாக குழுக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது

            பாமக நிர்வாக குழுக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 



இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

             தனி மனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வியாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான, விரும்புகிற உயர்கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு காரண காரியங்களுடன் ஆதாரங்களைத் திரட்டி முதன் முதலில் குரல் கொடுத்தது பாமகதான். அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததன் பேரில் கடந்த ஆண்டில் சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

        இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைப்பதென தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெருத்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை களைத்து நடைமுறைப்படுத்துவதான் ஏற்புடையதாகும். 200 கோடி ரூபாய் செலவில் சமச்சீர்க் கல்வி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், அதை நிறுத்தி வைப்பதென்ற முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர்க் கல்வி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நி
ர்வாகக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி தீர்மானம்



புதுச்சேரி:

            சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதி ஒதுக்க கோரி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

              பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரியில் ஒரு பலமான வெற்றிக் கூட்டணியை உருவாக்கி குறைந்த பட்சம் 7 சட்டமன்ற தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்து பெற்றுதர வேண்டுமெனவும், கூட்டணி சம்மந்தமாக முடிவு செய்ய பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யாவுக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது எனவும் இந்த நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்கிறது.

               மருத்துவர் அய்யா அமைக்க இருக்கும் கூட்டணியில் பா.ம.க.வும், கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, அணி பொறுப்பாளர்களும், தொகுதி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் அயராது பாடுபடுவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

             இக்கூட்டத்தில் ஆலோசகர் ராமக்கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராஜசேகரன், பொருளாளர் கோபி, மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் மதியழகன், வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால், ஞானசேகரன், கிருஷ்ணராஜ், செல்வராஜ், வேலு, வடிவேலு, யுணுஸ், தங்க.அறிவழகன், சுரேஷ், ரமேஷ், வெங்கடேசன், சந்தானம், பாண்டியராஜன், சங்கர், சீனுவாசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

தேர்தலுக்கு ஆயத்தம் பற்றி பா.ம.க. ஆலோசனை: இன்று தலைமை நிர்வாகக் குழு கூட்டம்

சென்னை:
 
              தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.10) நடக்கிறது.
 
           கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க கட்சியை தயார்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
 
           தமிழக மக்களைப் பெரிதும் பாதித்து வரும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இரு தினங்களுக்கு முன்பு பேசிய ராமதாஸ், 
 
               இப்போது திமுக, அதிமுக என எந்தக் கூட்டணியிலும் பா.ம.க. இல்லை என்று கூறியிருந்தார். அத்துடன் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ராமதாஸ் இதுபோன்ற நல்ல யோசனைகளை எப்போதாவது தெரிவிப்பார் என இளங்கோவன் கூறினார்.
 
            இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸôர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
            கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது. இருந்தாலும் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க. சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.
 
            இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பா.ம.க.வுக்கு மிரட்டல் விடுக்கும் செயல்பாடா என்ற கருத்து கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. எனவே இந்தச் சூழ்நிலையில் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றியும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்னாகரம் இடைத்தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று வன்னிய சமூகத்தவரின் ஆதரவைப் பெற்றதைப் போல, கணிசமான தொகுதிகளைத் தேர்வு செய்து தங்கள் ஆதரவை வலுப்படுத்திக் கொண்டு, தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசலாம் என்ற கருத்து கட்சிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த வகையில் செயல் திட்டங்களை உருவாக்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.