பாமக நிர்வாக குழுக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது

            பாமக நிர்வாக குழுக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 



இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

             தனி மனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வியாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான, விரும்புகிற உயர்கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு காரண காரியங்களுடன் ஆதாரங்களைத் திரட்டி முதன் முதலில் குரல் கொடுத்தது பாமகதான். அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததன் பேரில் கடந்த ஆண்டில் சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

        இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைப்பதென தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெருத்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை களைத்து நடைமுறைப்படுத்துவதான் ஏற்புடையதாகும். 200 கோடி ரூபாய் செலவில் சமச்சீர்க் கல்வி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், அதை நிறுத்தி வைப்பதென்ற முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர்க் கல்வி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நி
ர்வாகக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்: