பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு


              ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 16-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று பகல் 12.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக நடந்தது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டமன்ற வளாகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. வளாகம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

             நண்பகல்  12.13-க்கு பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும், 12.15-க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்தனர்.  முதலாவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.38 மணிக்கு `கடவுளறிய' என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.அமைச்சர்களைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள், முன்னாள் துணை முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா அதன்பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். விழா சரியாக 3.55 மணிக்கு முடிவடைந்தது.  
 
            ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பாமக வேட்பாளர் ஜெ.குரு, அணைக்கட்டு சட்டமன்றத்  தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் எம்.கலையரசு மற்றும் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.



0 கருத்துகள்: