மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இருந்தே சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

            இந்த கல்வி ஆண்டில் இருந்தே  மாணவர்களின் கல்வி நலன் கருதியும், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தேவையற்ற ஒன்றாகும். முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.

             தமிழக அரசின் முடிவால், 200 கோடி ரூபாயில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இருந்தே  மாணவர்களின் கல்வி நலன் கருதியும், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் சமச்சீர் கல்வி முறையை  நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்று  தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: