அ.கணேஷ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.கணேஷ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்க பா.ம.க.சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார் கோரிக்கை


சூட்டசபையில் பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

அதன் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று செஞ்சி பா.ம.க.சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார் பேசியது

                  நடந்த சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். போலீசார் இந்த விஷயத்தில் நிதானமாக நடந்து கொள்ளாமல் துப்பாக்கி சூடு நடத்தியது சரி அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவேண்டும். இந்த சம்பவத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

சட்டமன்றத்தில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு

       சட்ட  மன்றத்தில் இருந்து பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து, 

சட்டமன்ற உறுப்பினர்செஞ்சி கணேஷ் குமார் கூறியது: 

           கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனையை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று பேரவையில் பேச முயன்றோம். இதற்கு அனுமதிக்கவில்லை. இதேபோல இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அமிதாப்பச்சன் நடிப்பில் அரக்சன்  என்ற படம் வெளிவந்துள்ளது. 

            ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடலாம் என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி தரவில்லை. ஆனால், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தோம். அதை மட்டும் பதிவு செய்தனர். எங்களது கோரிக்கை குறித்து பேச அனுமதி இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கணேஷ் குமார் கூறினார். 

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் கூறுகையில், 

              ‘‘வேலூர் அருகே சோழவரம் கோயிலில் பழமையான 5 ஐம்பொன் நிலைகள் திருட்டு போய் உள்ளது. சிலை திருடர்களை போலீஸார் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள்

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகள் 

Jayankondam mlajayankondam mlajayankondam@tn.gov.in
Anaicut
mlaanaicut
Gingee
mlagingee
 

Jayankondam MLA - GURU @ GURUNATHAN J


http://www.tamilnadumlas.com/admin/mlaimage/Jayankondam%20-%20J.jpg

Anaikattu MLA - KALAIARASU.M



http://www.tamilnadumlas.com/admin/mlaimage/Anaikattu%20-%20M.jpg 


Gingee MLA - GANESH KUMAR.A



செஞ்சி அரசு மருத்துவமனையில் பா.ம.க.எம்.எல்.ஏ.கணேஷ் குமார் ஆய்வு



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0UUhlQPmlQbvs0SCMTJY1Yp2cxusTPhU5C7EgqJlmIn-NhunCsLVJzhwMSXvnuP4EZC42g5e_A471blw6qvFbQom4ZKJ7KXTsSKwCit0ZLgiRbQPTX2zz8Hy5dFOGfTJ_95keiZNKv9iw/s1600/ganesh.jpg


செஞ்சி : 

        செஞ்சி அரசு மருத்துவ மனையில் கலெக்டர் உத்தரவுக்கு பிறகும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. செஞ்சி எம்.எல்.ஏ., கணேஷ் குமார் நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். பெண்கள் வார்டில் இருந்தவர்கள் கடந்த மூன்று தினங்களாக கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என புகார் தெரிவித்தனர். மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் வசதியில்லை என பொதுமக்கள் கூறினர்.


             மருத்துவமனையின் பின்பகுதியை ஆய்வு செய்த பின்னர், அந்த பகுதி அசுத்தமாக இருப்பதை மருத்துவ அலுவலர் பாலகோபாலிடம் எம்.எல்.ஏ., சுட்டி காட்டினார். போதிய பணியாளர் இல்லாதால் முழுமையாக துப்புரவு பணி செய்ய முடியவில்லை என டாக்டர் தெரிவித்தார். குழாய்களில் தண்ணீர் வராமல் இருப்பது குறித்து விசாரிக்க பொதுப்பணித்துறை உதவி பொ றியாளர் பிரவீன் குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வரவழைத்தார். அவர் குடிநீர் பிரச்னை குறித்து புகார் செய்யப்படவில்லை எனவும், குறைகளை உடனே சரி செய்வதாகவும் கூறினார்.

               ஆய்வின் போது பா.ம.க., மாவட்ட தலைவர் தங்கசுந்தர்ராஜன், நகர செயலாளர் ரகுபதி உட்பட பலர் உடன் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மணிமேகலை ஆய்வு செய்தார். அப்போது குடிநீர், கழிப்பிடத்திற்கு முழுமையாக தண்ணீர் வசதி செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பிறகும் பெண்கள் வார்டில் கடந்த மூன்று நாட்களாக கழிவறையில் தண்ணீர் வராமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை எம்.எல்.ஏ., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இலங்கை அதிபருக்கு எதிராக நடவடிக்கை : பாமக சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார் வரவேற்பு


           ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்  மீது செஞ்சி சட்டமன்ற பாமக  உறுப்பினர் அ.கணேஷ்குமார் பேசினார்.   

 செஞ்சி சட்டமன்ற பாமக  உறுப்பினர் அ.கணேஷ்குமார் பேசியது

        இலங்கை அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. அனால் அங்குள்ள தமிழர்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்றால், தனி ஈழம் தான் சரியான வழி என்று பேசினார்.

 

பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு


              ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 16-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமும், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவும் நேற்று பகல் 12.30 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக நடந்தது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டமன்ற வளாகம் புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. வளாகம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

             நண்பகல்  12.13-க்கு பா.ம.க. எம்.எல்.ஏ.க்களும், 12.15-க்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்தனர்.  முதலாவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 12.38 மணிக்கு `கடவுளறிய' என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.அமைச்சர்களைத் தொடர்ந்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள், முன்னாள் துணை முதல்-அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா அதன்பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். விழா சரியாக 3.55 மணிக்கு முடிவடைந்தது.  
 
            ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பாமக வேட்பாளர் ஜெ.குரு, அணைக்கட்டு சட்டமன்றத்  தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் எம்.கலையரசு மற்றும் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.



செஞ்சி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து மேல்மலையனூரில் பிரசாரம் செய்யும் அன்புமணிராமதாஸ்.
செஞ்சி:
            தமிழகத்தில் ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராக வேண்டும்; அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வளத்தியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது:

                  செஞ்சி தொகுதி வேட்பாளர் தமிழக வேட்பாளர்களிடையே மிகக் குறைந்த வயதுடையவர். என்னப் பிரச்னைகள் ஆனாலும் தீர்த்து வைக்கக்கூடியவர். இவர் இங்கு வெற்றி பெற்றால்தான் அங்கு கருணாநிதி முதல்வராக முடியும். அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் தொடரும். ஜெயலலிதா 10 ஆண்டுகள் தமிழகத்தில் முதல்வராக இருந்தார். 

             இங்கு அதிமுகவினர் யாராவது இருந்தால் மைக் தருகிறேன் ஜெயலலிதாவின் ஒரு நல்ல திட்டத்தையாவது கூற முடியுமா? கருணாநிதி வாரத்துக்கு பள்ளி பிள்ளைகளுக்கு 5 முட்டைகளை வழங்கினார். திருமண உதவித்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என பல் வேறு நல திட்டங்களை வழங்கினார்.ஆனால் ஜெயலலிதா திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்தார், இலவச மின்சாரத்தை ரத்து செய்தார், கருணாநிதி நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்தார். 
 
            ஜெயலலிதா சொன்னதைச் செய்யமாட்டார்.கருணாநிதி சொன்னதைச் செய்யக்கூடியவர். இலவச டி.வி., கேஸ் இணைப்பு கொடுத்தார் தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடு வழங்கப்படும் என அறிவித்து மாணவர்களை பள்ளிக்கூடம் போகவிடாமல் ஆடு மேய்க்க போக வழி கூறியுள்ளார் என்றார் அன்புமணி ராமதாஸ்.

              இதனைத் தொடர்ந்து மேல்மலையனூர், அவலூர்பேட்டை, கடலாடிகுளம், ஆலம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் அன்புமணிராமதாஸ் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் செஞ்சிமஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

செஞ்சி சட்டமன்றத் தொகுதி பா.ம.க.வேட்பாளர் அ.கணேஷ்குமார் வரலாறு

 தொகுதி : செஞ்சி சட்டமன்றத் தொகுதி 
 
கட்சி : பா.ம.க. 

பெயர் : அ.கணேஷ்குமார் 

வயது : 26 

கல்வி : பி.இ. 

வசிப்பிடம் : வந்தவாசி 

தொழில் : பொறியியல் கல்லூரி நிர்வாகி 

சமூகம் : வன்னியர் 

கட்சிப் பொறுப்பு : திருவண்ணாமலை மாவட்டச் செயலர் 

குடும்பம் : 

தந்தை - பேராசிரியர் அருணாச்சலம் 

தாயார் - பாலாமணி