சட்ட மன்றத்தில் இருந்து பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து,
சட்டமன்ற உறுப்பினர்செஞ்சி கணேஷ் குமார் கூறியது:
கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனையை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று பேரவையில் பேச முயன்றோம். இதற்கு அனுமதிக்கவில்லை. இதேபோல இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அமிதாப்பச்சன் நடிப்பில் அரக்சன் என்ற படம் வெளிவந்துள்ளது.
ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடலாம் என்று வலியுறுத்தினோம். அது தொடர்பாக தொடர்ந்து பேச அனுமதி தரவில்லை. ஆனால், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதற்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தோம். அதை மட்டும் பதிவு செய்தனர். எங்களது கோரிக்கை குறித்து பேச அனுமதி இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கணேஷ் குமார் கூறினார்.
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் கூறுகையில்,
‘‘வேலூர் அருகே சோழவரம் கோயிலில் பழமையான 5 ஐம்பொன் நிலைகள் திருட்டு போய் உள்ளது. சிலை திருடர்களை போலீஸார் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக