செஞ்சி அரசு மருத்துவமனையில் பா.ம.க.எம்.எல்.ஏ.கணேஷ் குமார் ஆய்வு



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0UUhlQPmlQbvs0SCMTJY1Yp2cxusTPhU5C7EgqJlmIn-NhunCsLVJzhwMSXvnuP4EZC42g5e_A471blw6qvFbQom4ZKJ7KXTsSKwCit0ZLgiRbQPTX2zz8Hy5dFOGfTJ_95keiZNKv9iw/s1600/ganesh.jpg


செஞ்சி : 

        செஞ்சி அரசு மருத்துவ மனையில் கலெக்டர் உத்தரவுக்கு பிறகும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. செஞ்சி எம்.எல்.ஏ., கணேஷ் குமார் நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். பெண்கள் வார்டில் இருந்தவர்கள் கடந்த மூன்று தினங்களாக கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என புகார் தெரிவித்தனர். மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் வசதியில்லை என பொதுமக்கள் கூறினர்.


             மருத்துவமனையின் பின்பகுதியை ஆய்வு செய்த பின்னர், அந்த பகுதி அசுத்தமாக இருப்பதை மருத்துவ அலுவலர் பாலகோபாலிடம் எம்.எல்.ஏ., சுட்டி காட்டினார். போதிய பணியாளர் இல்லாதால் முழுமையாக துப்புரவு பணி செய்ய முடியவில்லை என டாக்டர் தெரிவித்தார். குழாய்களில் தண்ணீர் வராமல் இருப்பது குறித்து விசாரிக்க பொதுப்பணித்துறை உதவி பொ றியாளர் பிரவீன் குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வரவழைத்தார். அவர் குடிநீர் பிரச்னை குறித்து புகார் செய்யப்படவில்லை எனவும், குறைகளை உடனே சரி செய்வதாகவும் கூறினார்.

               ஆய்வின் போது பா.ம.க., மாவட்ட தலைவர் தங்கசுந்தர்ராஜன், நகர செயலாளர் ரகுபதி உட்பட பலர் உடன் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மணிமேகலை ஆய்வு செய்தார். அப்போது குடிநீர், கழிப்பிடத்திற்கு முழுமையாக தண்ணீர் வசதி செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பிறகும் பெண்கள் வார்டில் கடந்த மூன்று நாட்களாக கழிவறையில் தண்ணீர் வராமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை எம்.எல்.ஏ., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்: