சேத்தியாத்தோப்பு:
அனைத்து வன்னியர்களும், மற்ற கட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு பா.ம.க.,வை ஆதரிக்கவேண்டும்,'' என, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, கே.பி.டி. திருமணமகாலில் நேற்று நடந்த திருமணவிழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
படையாண்ட ஜாதி, ஆண்டபரம்பரை, மன்னர் வம்சம், பாராண்டவர்கள் என வாழ்ந்த வன்னியர்கள், இப்போது ஏதாவதுஒரு வழக்கில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இங்கே இருக்கும் பெண்களுக்கு சொல்கிறேன்...
இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரபிரதேசத்தில், 403 தொகுதிகள் உள்ளன. அங்கு 20 சதவீதமே உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்த மாயாவதி, ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கிறார்.
அங்கு அவர்களால் முதல்வராக முடியும் போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு வாழும் வன்னியர்களால் முதல்வராக முடியவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லை. வன்னியர்களை, வன்னியர்களே தோற்கடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் தான், விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்கடிக்கப்பட்டார். மதுரையிலிருந்து வந்த யாரோ ஒருவரை, எம்.எல்.ஏ.,வாக ஏற்றுக் கொண்டனர். விருத்தாசலத்தில் கோவிந்தசாமி தோற்க வேண்டும் என,அனைத்து ஜாதியினரும் ஒன்றுசேர்ந்தனர்.
லோக்சபா தேர்தலில் நம்மைஎதிர்த்து நின்றவர்கள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குச்சென்று பணம் கொடுத்த போது,
"நாங்கள் எங்கள் வேட்பாளருக்குஓட்டு போடுவோம். வன்னியர்களிடம் கொண்டு போய் கொடுங்கள்' என்று, கூறினர். பணத்தைபெற்றுக் கொண்ட வன்னியர்கள், பா.ம.க.,வை தோற்கடித்தனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஓட்டு கேட்காமலேயே 100 பேர் ஜெயிக்கின்றனர். அந்த நிலைதமிழகத்தில் வர வேண்டும்.
வன்னியர்கள் வளரக்கூடாது என்பதில் எல்லா கட்சிகளும் உறுதியாக உள்ளன. நான் வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்தவன் என கூறிவிட்டு,தி.மு.க., - அ.தி.மு.க.,வில் இருக்கக் கூடாது. வன்னியர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்த இன்னொரு ராமதாஸ் எப்போது வருவாருன்னு சொல்லமுடியாது. எனவே, அனைத்து வன்னியர்களும் மற்ற கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு, பா.ம.க.,விற்கு ஓட்டு போடும் நாள் வரவேண்டும். அந்த நிலை வந்தால்,பா.ம.க., ஆட்சியில் அமர்வதையாராலும் தடுக்க முடியாது.
பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும், வன்னியர் முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் உள்ள அனைத்துகட்சித் தலைவர்களும் குடிக்கச்சொல்கின்றனர். நான் மட்டும்தான் படிக்கச் சொல்கிறேன். இந்தசமுதாயம் வாழ வேண்டும் என்றால், அனைவரும், பா.ம.க.,வை ஆதரிக்க வேண்டும் .இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக