பாமக கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாமக கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சி மன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதுரையில் பேட்டி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/41d3211b-2d8e-4fa7-a4fa-60e506cfaaf7_S_secvpf.gif
 
மதுரை:

            உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று  மதுரை சென்றார் .
 
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி  
 
            தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதை பார்க்கும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான பட்டியல் வெளியிடாத நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அறிவிப்பு வந்து 14 மணி நேரத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யசொல்வது தமிழகத்தில் இதுதான் முதல் முறையாகவும்.

             இடஒதுக்கீடு பட்டியலை முன்கூட்டியே அ.தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டு அத்தனை இடங்ளிலும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. அறிவித்தபிறகு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.   தேர்தல் தேதி அறிவித்த பிறகு ஒரு வாரத்திற்கு பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று இருக்கிறது. ஆனால் இப்போது அறிவித்து இருப்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். இதன் மூலம் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை இந்த உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டி யலை தயாரிக்க நேரம் கிடைக்கும்.

              தமிழ்நாட்டில் அரசியல் தலையீடு காரணமாக காவல்துறை பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த துறை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பாக திகழ வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். நீதி விசாரணை என்ற பெயரால் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான வழக்குப்போட அரசு தயங்கக்கூடாது. பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அங்கு போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும். இப்படிப்பட்ட அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.

               கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவலியுறுத்தி அப்பகுதி மக்கள் 11 நாட்கள் உண்ணாவிரம் நடத்தியதில் முதல்கட்ட வெற்றிகிடைத்துள்ளது. அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது பா.ம.க.வின் கொள்கையாகும். தமிழ் நாட்டில் ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
            பெரியாறு அணை பிரச்சினையில் அ.தி.மு.க. வின் நிலை என்ன? உச்சநீதி மன்றம் என்ன கூறி இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.   வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வாரத்தில் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தபோது குறைகளை சுட்டிக்காட்டியதால் வெளியேற்றப்பட்டோம். தமிழ் நாட்டில் மக்கள் பிரச்சினைக்காக பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறி னார்.

             பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், துணைப்பொதுச்செயலாளர்கள் ரமேஷ், செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்


 http://dinamani.com/Images/article/2011/9/10/ramadoss.jpg


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் அளித்த பேட்டி


           விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். கட்சிகள் பெறும் ஓட்டுகள் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை கட்சி நியமிக்கும். அப்படி நடை பெறும்போது இடைத் தேர்தல் நடத்த தேவையில்லை. பணச்செலவு ஏற்படாது.

           திருச்சி மேற்கு தொகுதியில் பா.ம.க. போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலில் இரண்டு, மூன்று ஓட்டுகள் போடனும். அதனால் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.  மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வது போல ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.  மோனோ ரெயில் திட்டத்தால் நன்மை கிடையாது. அதை கைவிட வேண்டும். அரசு உறுதியாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மது விலக்கை கேட்கிறவர்களே கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று கூறியுள்ளார். கள்ளச் சாராயம் விற்பது யார் என்று அவர் கூற வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை. ம.தி.மு.க. வில் திராவிட என்ற வார்த்தை உள்ளது. அதை ஏற்க முடியாது. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். அரசு அமைக்கின்ற துணை நகரம் அரசு சொந்த நிலத்தில் அமைகிறது. அதனால் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

           தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பா.ம.க. மட்டுமே மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் முறைகேடு நடக்க வழி வகுக்கும். அதனால் ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உடன் இருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் மூன்றாம் அணி


         http://www.koodal.com/news/2011/july/7-27-2011-51-pmk-general-council-meet-discu.jpg


http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/10586e29-cf76-4459-84ca-4b0a55a07b7c_S_secvpf.gif
          பா.ம.க. தலைமை பொதுக்குழு சென்னையில் நேற்று  நடந்தது.  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலை விகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார்,


            "கடந்த காலங்களில் நாம் பல பாடங்களை, படிப்பினையை பெற்றுள்ளோம். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெற்றது சரியான அணுகுமுறைதான். தமிழக தேர்தலில் இனி யாரிடமும் “சீட்” கேட்டு போக தேவையில்லை. நாம் நமது வலிமையை உணராமல் இருக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடுகிற, நமது தலைவர் “சீட்” கொடுப்பவராக இருக்க வேண்டுமே தவிர, அதை கேட்பவராக இருக்க கூடாது.   திராவிட கட்சிகள் தரும் ஏழு, எட்டு சீட்டுக்களை வைத்துக் கொண்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது.

            திராவிட கட்சிகளின் அரசியல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. திருச்சி சிவா எம்.பி., நம்மை பார்த்து பா.ம.க. பிழைக்க வேண்டும்” என்று கிண்டல் செய்கிறார். நாம் மாற்றி அணி அமைக்க வேண்டும். அதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்க வேண்டும். அதற்கான முழு தகுதியும், வலிமையும் அவருக்கு உள்ளது.  தமிழ் மக்களை பாதுகாக்க மாற்று அரசு அமைவது அவசியம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் மக்களை காப்பாற்றியதாக வரலாறு இல்லை.

            வார்தை ஜாலம், பழி வாங்குவது, இலவசம் வழங்குவது போன்றவற்றையும் இரண்டு திராவிட கட்சிகளும் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.  இந்த இரண்டு கட்சிகளின் செயல்பாடுகளால் அடிதட்டு மக்களின் வாழ்க்கை நாசமாகி வருகிறது. மதுவினால் மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது.

            இதை எதிர்த்து போராடுவது டாக்டர் ராமதாஸ் மட்டும்தான். முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை தவிர சீர்திருத்த பணியில் அவர்கள் ஈடுபடுவது இல்லை.  எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் மாற்று அணி அமைக்க வேண்டும். அதுதான் மக்கள் கூட்டணி’’என்று பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பலரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள்.   

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

             தலைமை பொதுக்குழு தீர்மானத்தில், கடந்த காலங்களில் தேர்தலுக்காக பா.ம.க கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் தனக்கான கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. சமரசமும் செய்து கொண்டதில்லை. இடஒதுக்கீட்டுக் கொள்கை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, வேளாண் கொள்கை, மது ஒழிப்புக் கொள்கை, இளைஞர் நலன்  சார்ந்த  மகளிர் நலன் சார்ந்த கொள்கைகள், சுகாதாரக் கொள்கை, ஈழத்தமிழர் பிரச்சினை, சிறப்புப் பொருளாதார மண்டலம், சில்லரை வணிகம் போன்ற மக்களின் வாழ்வுரிமைக்கான, தமிழக மேம்பாட்டுக்கான நிலைகளில் பா.ம.க ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. குரல்கொடுக்கவும், போராடவும் தயங்கியதில்லை. ஒதுங்கியும் நின்றதில்லை.

எனவே பா.ம.க கீழ்க்காணும் முடிவுகளை அறிவிக்கிறது.

1) தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க தலைமையில் மாற்று அணியை உருவாக்கி அதன்வழி தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவது என உறுதி பூண்டுள்ளது. இக்கொள்கையில் ஏற்புடைய கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றிற்கும், சனநாயக சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றவர்களுக்கும் பா.ம.க தலைமையிலான மாற்று அணியில் சேர பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுக்கிறது.

2) நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன் பிறகு வரும் எல்லா  தர்தல்களிலும், பா.ம.க தலைமையிலான அணியே தேர்தலை சந்திக்கும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

3) பா.ம.க தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாமக தலைமை பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


       கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, குரு எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் சையத் அக்பர், மற்றும் நிர்வாகிகள் கோபால், ஜெயராமன், அம்பத்தூர் சேகர், ஜமுனா, அருள், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி : பா.ம.க பொதுக்குழு ஆலோசனை கூட்டம்

      தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.,உடன் கூட்டணி தொடர்வது குறித்து பா.ம.க.,வின்பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்





திண்டிவனத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தை முடித்தார்

திண்டிவனம்:

          பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று பிரசாரத்தை முடித்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தியார் திடலில் பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

மாலை 4.40 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது

             :இது ஜனநாயக முற்போக்கு கூட்டணி. எதிரணியில் ஜனநாயகமும் இல்லை; முற்போக்கும் இல்லை. கருணாநிதியை 5 நிமிடத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஜெ.,வையோ 10 நாட்கள் அல்ல, ஒரு மாதமானாலும் தொடர்பு கொள்ள முடியாது. 

            இது எனக்கு மட்டுமல்ல, இப்போது அந்த கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி தோழர்களும் இதை கூறுவர்.கருணாநிதியின் 10 ஆண்டு சாதனைகளையும், ஜெ.,வின் 10 ஆண்டு சாதனைகளையும் தராசில் எடை போடுங்கள். கருணாநிதி பக்கம் 1,000 மடங்கு கீழே இறங்கும். இந்த தேர்தலில் கருணாநிதி ஆதரவு அலை வேகமாக வீசுகிறது. ஜெ., ஆளத் தகுதியற்றவர். அவர் ஆட்சிக்கு வரக்கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களிக்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களிக்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

               பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.

              மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்?  தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.

          கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.

               தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம்: அன்புமணி ராமதாஸ்



 

             சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.  முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவரது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர்  பேசிய அன்புமணி ராமதாஸ்,

                முதல் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன்.   காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.


               இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

பாமகவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட புதுமுகங்களுக்கு வாய்ப்பு

சென்னை:
           தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த தேர்தலில் பா.ம.க. 31 தொகுதிகளில் போட்டியிட்டது. 

அதில் 

செங்கல்பட்டு, 
ஆற்காடு, 
பெரணமல்லூர், 
தாரமங்கலம், 
காஞ்சிபுரம், 
முகையூர், 
எடப்பாடி, 
மேல் மலையனூர், 
ஓமலூர், 
கபிலர்மலை, 
பூம்புகார், 
மேட்டூர், 
திருப்போரூர், 
காவேரிப்பட்டினம்,
பவானி, 
திருப்பத்தூர், 
தருமபுரி, 
பண்ருட்டி 

                    ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறை தோல்வியடைந்த தொகுதிகளில் தோல்விக்கான காரணம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பில் சில தொகுதிகள் மாறி உள்ளன. வெற்றி பெற்ற தொகுதிகளை உறுதியாக கேட்கவும், மேலும் உள்ள 13 தொகுதிகளில் சில தொகுதிகளை மாற்றி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

            சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பா.ம.க. பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. 


எனவே

சென்னையில் 

திரு.வி.க.நகர் (தனி), 
அண்ணாநகர், 
வேளச்சேரி, 
மைலாப்பூர் 

               ஆகிய 4 தொகுதிகளை கேட்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 8 முதல் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை அவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பாமகவுக்கு திமுக கூட்டணியில் 31 தொகுதிகள்



கோபாலபுரம் :

        முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாம நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

                இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான உடன்பாடு கையெழுத்தானது. மேலும் மாநிலங்களவையில் ஒரு இடம் பாமகவுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்




கோபாலபுரம்:

        திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

             முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாம நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

           திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான உடன்பாடு கையெழுத்தானது. மேலும் மாநிலங்களவையில் ஒரு இடம் பாமகவுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு முடிந்ததும் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 

              மகிழ்ச்சியுடன் வந்தேன். மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கிறேன். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி பெறும். மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணிக்கு வர இருக்கின்றன.

கேள்வி:  கடந்த தேர்தலின் போதும் இதே அளவுதான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்:  இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி:  சோனியா காந்தியை சந்திப்பீர்களா?
பதில்:  முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ஏற்கனவே டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசி விட்டார்.

கேள்வி:  இன்று கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்த்து வந்தீர்களா?
பதில்:  எதிர்பார்த்தும் வந்தேன்.

கேள்வி:  தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விடலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளதே?
பதில்:  தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் அமோக வெற்றி பெறும்.

கேள்வி:  45 தொகுதிகள் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று முன்பு கூறினீர்களே?

பதில்:  தேர்தலுக்கு முன்பு இதுபோன்று கூடுதல் தொகுதிகளை சொல்வது வழக்கம்தான்.

கேள்வி: கடந்த தேர்தலிலும் இதே அளவு தொகுதிகள்தான் கிடைத்தன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் போட்டியிடுகிறீர்களே அது ஏன்?

பதில்:  நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

கேள்வி:  இந்த தேர்தலில் உங்கள் பிரசாரம் எப்படி இருக்கும்?

பதில்:  அது பின்னர் தெரிய வரும் என்றார்.

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும்: முதல்வர் கருணாநிதி


 

கோபாலபுரம் :

          திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
                   
               முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாமநிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்றார்.

திமுக கூட்டணியில் பாமக: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு

 சென்னை:

               திமுக பாமக இடையிலான கூட்டணி மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் பேசிய  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி   தலைவர் திருமாவளவன்,

           திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருப்பது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  ஒரே கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாமகவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இந்த தேர்தலில் உருவாகி உள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இடம் பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கூட்டணி என்பதை நிரூபித்து காட்டுவோம். இணைந்து செயலாற்றுவோம் என்றார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை வரவேற்கிறோம்: தங்கபாலு

மிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியது: 

               தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வை வரவேற்கிறோம் என்றும் தங்கபாலு கூறினார்.

   

சோனியாகாந்தியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

 டெல்லி:

         காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

             டெல்லியில் 17.02.2011 அன்று காலை டாக்டர் அன்புமணி ராமதாஸ், சோனியா காந்தி வீட்டுக்கு காலை 11.30 மணிக்குச் சென்றார். அங்கு, அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது என்றும், இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள் என்றும் தெரிகிறது. தனது அக்காள் மகன் திருமண அழைப்பிதழை நேரில் சென்று கொடுப்பதற்காகவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் 

             டெல்லியல் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் திமுக கூட்டணியில் பாமவை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். சோனியா காந்தியை அன்புமணி ராமதாஸ் சந்தித்ததற்கும், தங்கபாலு பாமகவை வரவேற்கிறோம் என்று கூறியதும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகிவிட்டது.

பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து

சென்னை: 

             தேர்தலுக்கு முந்தைய தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் முடிவடைந்ததையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து  வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 

           இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததால் பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து  தந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். சென்னையில் நடந்த இந்த தேனீர் விருந்தில்   இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.

கூட்டணி

           கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு : ஜி.கே.மணி கோரிக்கை

சென்னை:
 
            சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சட்டப் பேரவை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
 
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசியது:
 
           நுழைவுத் தேர்வு ரத்து, சென்னை துணை நகரத் திட்டம் கைவிடப்பட்டது, மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி, தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, சமச்சீர் கல்வி, லாட்டரி சீட்டு ஒழிப்பு போன்ற பா.ம.க. வலியுறுத்திய பல்வேறு கோரிக்கைகள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்ட மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற மனமுவந்து பா.ம.க. வாக்களித்தது. இலங்கைப் பிரச்னை குறித்து நான் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
            அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்தல், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக 100 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மாநிலங்களே இட ஒதுக்கீடு கொள்கையை வகுத்துக் கொள்ள அனுமதி, உயர் நீதிமன்றத்தில் தமிழ், மது ஒழிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டும், முழு அளவில் நிறைவேற்றப்படாமலும் உள்ளது. 
 
             இக்கோரிக்கைகள் நிறைவேற பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். 7 நீதிபதி பணியிடங்களுக்கு இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியலில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. எனவே, இப்பட்டியலை திரும்பப் பெற்று வன்னியரை சேர்த்து புதிய பரிந்துரை பட்டியலை அனுப்ப வேண்டும். விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர பதுக்கல், ஆன்-லைன் வர்த்தகத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். நலிவடைந்துள்ள விவசாயம், நெசவுத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். 
 
            மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வசதியை மேம்படுத்தும் வகையில் நதிகள் இணைப்புக்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் பரிசீலினையில் உள்ள தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற ரூ.5.60 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
              இதனை நிறைவேற்ற அந்தந்தப் பகுதி மக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.நாட்டுப்பற்றை உருவாக்கும் வகையில் ஒன்றிய அளவில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இளைஞர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க. பெரும் சோதனையை சந்தித்தது. ஆனால், பென்னாகரம் இடைத் தேர்தலில் இரு பெரும் சக்திகளை எதிர்த்து பாமக 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ம.க. தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பேரவைத் தேர்தலில் பா.ம.க. இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றார் ஜி.கே.மணி.

2016 - ல் பாமக ஆட்சி - ராமதாசு உறுதி

தர்மபுரி:

          2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என பாமக நிறுவனர் ராமதாசு கூறியுள்ளார்.

ர்மபுரியில் நடந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாசு:

             2011-ல் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும், 2016-ல் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றார். இதற்காக கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் கொடுக்கப்படும் என்று கூறிய ராமதாசு, இளைஞர்கள் வரும் தேர்தலில் கட்சிக்காக பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்த கட்சி கூட்டணியிலும் சேர முடியாத நிலையில் உள்ளது. தற்போது காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்து தான், பாமக திமுக அணியில் சேருமா? அல்லது அதிமுக அணியில் சேருமா? அல்லது தனித்து விடப்படுமா என்பது தெரிய வரும்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி

 சேலம் :

           சேலத்தில்  பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று தா.பாண்டியன் கூறினார்.

கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால் வரவேற்பீர்களா?

பதில்:
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால்,  பா.ம.க.வின் நோக்கம் தி.மு.க.வை முறியடிப்பதாக இருக்க வேண்டும்.

பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

கிருஷ்ணகிரி:


             வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் என, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

                 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளைத்தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. 



கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

              இன்றைய இளைஞர்களில் பலர் சினிமா மோகத்தாலும், மது, சிகரெட் போன்ற போதை பொருட்களாலும் அழிவுப் பாதையில் செல்கிறார்கள். இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவது எப்படி? இளைஞர்களுக்கு 12 ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வியும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் அனைவருக்கும் ஆராய்ச்சி படிப்பு போன்ற அனைத்து உயர்கல்வியும் இலவசமாக வழங்க வேண்டும்.

               நாம் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். அது எந்த கட்சியுடன் கூட்டணியாக இருந்தாலும் சரி, பர்கூர் தொகுதியை பா.ம.க.விற்கு கேட்டு வாங்குவோம். எனவே விரைவில் பர்கூர் தொகுதியில் தொகுதி மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என்றார்.
           

                  படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தமிழகத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆனால் வேலைவாய்ப்பு லுவலகத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்துள்ளனர். சினிமா மோகத்தில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்.

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

ஈரோடு:

          பாமக நிறுவனர் ராமதாஸ் ஈரோடு மாவட்டம் பர்கூரில்  பேட்டியளித்தார்.  ’’கூட்டணி குறித்து 4 நாட்களில் முடிவு கூறப்படும். எந்த கூட்டணியாக இருந்தாலும் பர்கூரை பா.ம.க., கேட்டு பெறும்’’ என்று தெரிவித்தார்.