சென்னை:
திமுக பாமக இடையிலான கூட்டணி மகிழ்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருப்பது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரே கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாமகவும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இந்த தேர்தலில் உருவாகி உள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இடம் பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கூட்டணி என்பதை நிரூபித்து காட்டுவோம். இணைந்து செயலாற்றுவோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக